Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்: திருமாவளவன், முத்தரசன் கைது

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விவசாயிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் ஏர்கலப்பையுடன் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் விவசாயில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளுடன் திமுக, காங்கிரஸ் கட்சியினரும் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். போலீஸ் தடுப்பை மீறி காரைக்கால் - பெங்களூர் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் ஏராளமான திமுகவினர் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.  இதனால் போலீஸார் குவிக்கப்பட்டனர். அத்துமீறி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரியில் மத்திய அரசைக் கண்டித்து விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் ரயில் மறியல் போராட்டத்தில் விவசயாய சங்கத்தினர் தண்டவாளத்தில் அமர்ந்து சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட் அனைத்து கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சேலம் ரயில் நிலையத்தில் மறியல் செய்த அனைத்து கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ