Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி விவகாரம்: ஜி.எஸ்.ஜா குழு அறிக்கை தாக்கல்

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவில் உயர்மட்ட தொழில் நுட்பக்குழு உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஜி.எஸ்.ஜா தலைமையிலான குழு முதலில் கர்நாடகவில் உள்ள அணைகளில் ஆய்வு நடத்தியது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மேட்டூர், பவானி உள்ளிட்ட அணைகளில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்கு பின்னர் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்தக் குழு ஆய்வு நடத்தியது.

இந்த நிலையில், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் உயர்மட்ட தொழில் நுட்பக்குழுவின் தலைவர் ஜி.எஸ்.ஜா இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ