Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போராட்டம் எதிரொலி: புறநகர் ரயில் சேவை நிறுத்தம்!

தொடர் மறியல் போராட்டத்தால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் இன்று விவசாயிகள் மற்றும் திமுக, மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பெரம்பூர் ரயில் நிலையத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால், ஏராளமான திமுகவினர் இந்த மறியலில் பங்கேற்றனர். இதனால் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன.

மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ