Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகம் கைது!

காதலிப்பதாக ஏமாற்றி பெண் காவலர் ராமு என்பவரின் தற்கொலைக்குக் காரணமான பயிற்சி எஸ்.ஐ-யான அருமைநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பொட்டல் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ராமு (23). இவர், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றினார். இவர், சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, ஆலங்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஏட்டுவாக பணியாற்றிய ஆலங்குளத்தைச் சேர்ந்த அருமைநாயகத்துடன் நட்பு ஏற்பட்டது. அருமைநாயகத்துக்கு திருமணமாகி, குழந்தை உள்ளது. அதையெல்லாம் மறுத்து ராமுவுடன் அருமைநாயகம் நெருங்கிப் பழகினார். ஒருகட்டத்தில் ராமுவை வெறுத்துதள்ளினார் அருமைநாயகம். 

இது குறித்து ராமு, காவல்நிலையத்தில் புகார் அளிக்க முயன்றுள்ளார். அப்போது ராமுவை சமரசப்படுத்திய அருமைநாயகம் வழக்குப்பதிவு செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதன்பிறகு ராமுவை அருமைநாயகம் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுரை உயர் நீதிமன்றத்தில் ராமு, மனுதாக்கல் செய்தார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருமைநாயகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்த ராமு, கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை அருமைநாயகத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் அருமைநாயகமும், ராமுவும் பேசிய போன் உரையாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மூன்று ஆடியோக்கள் போலீசிடம் சிக்கியுள்ளன. அதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடந்தி வந்தனர்.

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகத்தை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர் ராமுவின் உடலை 7 நாட்களுக்குப் பின்னர் உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். 

- ஆண்டனிராஜ், எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ