Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜாத்தி அம்மாவுக்கு 'நோ' சொன்ன சசிகலா புஷ்பா!  -தோல்வியில் முடிந்த டெல்லி பேச்சுவார்த்தை

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வருகையைவிட, ராஜாத்தி அம்மாவின் வருகை அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது. ' சசிகலா புஷ்பாவின் செயல்பாடுகள் தொடர்பாகவே சில விஷயங்கள் பேசப்பட்டன" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

அப்போலோ மருத்துவமனைக்கு கடந்த 13-ம் தேதி இரவு 9.30 மணியளவில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் வந்தார். அவரை வரவேற்று இரண்டாவது மாடிக்கு அழைத்துச் சென்றனர். சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் முதல்வரின் உடல்நலம் குறித்து பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. ஆனால், 'கனிமொழி மூலமாக செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து சசிகலா விவாதித்தார்' என்கின்றனர் கட்சி நிர்வாகிகள் சிலர். 

"முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நேரத்தில் வதந்தி பரப்புகின்றவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பாவின் செயல்பாடுகள்தான், கார்டன் வட்டாரத்துக்கு கூடுதல் எரிச்சலை அளித்து வருகிறது. 'முதல்வரின் கையெழுத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்; முதல்வரைச் சுற்றி மோசடிகள் நடக்கிறது' என்றெல்லாம் தினம்தினம் பேட்டி அளித்து வந்தார். ' தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் துணையோடுதான் புஷ்பா செயல்படுகிறார்' என்றாலும், 'அவருக்கு ஏதாவது ஒரு வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்' என முடிவெடுத்தார் சசிகலா. இதையடுத்தே, ராஜாத்தி அம்மாவுடன் சந்திப்பு நடந்தது" என விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், 

" மருத்துவமனையில் இருந்த 45 நிமிடங்களில் சசிகலா புஷ்பா பற்றி பேசிய சசிகலா, ' எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசி வருகிறார். முதல்வர் உடல்நலமில்லாமல் இருக்கும்போது இவ்வாறு செய்வது கட்சித் தொண்டர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி மூலம் அவரிடம் பேசி, அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்' எனப் பேசியிருக்கிறார். ராஜாத்தி அம்மாவும், ' நான் கண்டிப்பாக பேசுகிறேன்' என உறுதியளித்தார். இதன்பின்னர் கனிமொழியிடம் இதுபற்றிப் பேச, அவரோ, ' நான் இந்த விவகாரத்தில் தலையிட மாட்டேன். நீங்களும் தலையிட்டு வீண் பிரச்னையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்' என உறுதியாகச் சொல்லிவிட்டார். 

இதன்பின்னர், டெல்லியில் இருந்த சசிகலா புஷ்பாவை, ராஜாத்தி அம்மாள் சார்பாக நேரடியாக சந்தித்துப் பேசினார் உதவியாளர் ஒருவர். அவரிடம் பேசிய சசிகலா புஷ்பா, ' கனிமொழி அம்மாவிடம் நான் சொல்வதை அப்படியே சொல்லுங்கள். மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் நான் இருந்தபோது, எனக்கு ஆதரவாக நீங்கள் இருந்தீர்கள். அதற்கு என்னுடைய நன்றி. என் வாழ்க்கையில் நீங்கள் செய்த உதவிகளை மறக்க முடியாது. உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன். இப்போதுள்ள சூழலில், கட்சி சீனியர்கள் என்னிடம் வேறு மாதிரி சொல்கின்றனர். ' நாளை அம்மா குணமாகி வந்தால், என்னுடைய செயலை பாராட்டுவார்' என்கின்றனர். நான் இவ்வாறு செயல்படுவதையே கட்சித் தொண்டர்களும் விரும்புகின்றனர்' எனப் பேசி அனுப்பியிருக்கிறார். அவரது இந்தப் பதிலை ராஜாத்தி அம்மாள் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தகவல் சசிகலாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகலா புஷ்பாவுக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் வீட்டின் மீது தாக்குதல், அதைத் தொடர்ந்து புஷ்பா ஆதரவாளரான ஹரி நாடார் கைது என காவல்துறையின் வேகம் அதிகரித்தபடியே இருக்கிறது. 

இந்தக் கட்டுரையை வீடியோவாகவும் காணலாம்

- ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ