Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்துக்கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் அனைத்துக்கட்சியினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. புறநகர் ரயில் சேவை முற்றிலும் முடங்கியது.

போராட்டம் காரணமாக இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ