Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்துக்கு நவ. 19-ல் இடைத்தேர்தல்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் பறந்தன. இதையடுத்து, இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தலை ரத்து செய்தது ஆணையம்.

தமிழக தேர்தல் முடிந்து ஐந்து மாதங்கள் நிறைவடைந்த 6வது மாதம் பிறந்துள்ளது. ஒரு தொகுதியின் எம்எல்ஏ இறந்தாலோ அல்லது வேறு காரணங்களுக்காக தேர்தலை தள்ளி வைத்தாலோ ஆறு மாதத்தில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த சீனிவேல் சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியும் காலியாக இருந்தது. 

இந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த 4 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 22ஆம் தேதியும், நவம்பர் 2ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், நவம்பர் 3ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், வேட்பு மனு திரும்பப் பெற நவம்பர் 5ஆம் தேதி கடைசி நாள் என்றும், நவம்பர் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ