Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போலோ வாசலில் பூஜை நடத்திய கோகுலஇந்திரா

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மகளிர் அணி நிர்வாகிகளுடன் சேர்ந்து அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் பூஜை நடத்தினார். 

உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 26-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் நலம் பெற வேண்டி அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு பூஜைகளை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் இன்று பூஜை நடத்தினார். புரோகிதர் மந்திரங்கள் ஓத, கோகுலஇந்திரா பூக்களைப் போட்டு பூஜை செய்தார். இந்த பூஜையில் விஜிலா சத்தியானந்த் எம்.பி., மகளிரணி இணை செயலாளயர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

படம்: தி.குமரகுரு

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close