Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கை அதிபருக்கு திருச்சியில் வரவேற்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று விட்டு கோவா வழியாக திருச்சி வந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட ‘பிரிக்ஸ்‘ அமைப்பின் 2 நாள் மாநாடு கோவா மாநிலத்தின் பெனாலிம் நகரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாடு நிறைவடைந்த பின்னர் தலைவர்கள் சொந்த நாடு திரும்பினர்.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்று விட்டு கோவாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் வழியில் இலங்கை அதிபர் சிறிசேனா இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் கலெக்டர் பழனிச்சாமி, காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா ஆகியோர் இலங்கை அதிபரை வரவேற்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close