Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் நிலையங்களில் தாய்மார்களுக்கு அத்யாவசிய வசதி!


வீட்டுக்கு வெளியே உள்ள உலகம் ஆணைப்போல பெண்ணுக்கு வசதியானதாக அமைவதில்லை. மாதவிடாய் நேரம், பாலூட்டும் நேரம், இரவு நேரம், புதிய இடம் என அவள் வெளியிடங்களில் சந்திக்கும் அவஸ்தைகள் நிறைய. இந்நிலையில், பெண்களுக்குத் தேவைப்படும் ப்ரைவஸி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, ரயில்வேதுறை எடுத்துள்ள ஒரு புதிய முயற்சி வரவேற்புக்கு உரியது.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் சமீபத்தில்(13.10.16) பெண்களுக்கான பிரத்யேக சேவை மையம்(Facilitation Centre) ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதில் உள்ள அறையில் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு என தனி இடம் அமைத்துள்ளனர்.

''இந்த மையம் அமைக்க, பயணிகளின் தொடர் கோரிக்கைதான் காரணம்'' என்று சொல்லும் மையத்தின் பொறுப்பாளரான நிலைய மேலாளர் பிரபாகரன், இதன் மற்ற சிறப்பம்சங்களை விளக்கினார்.

''முழுக்க முழுக்கப் பெண்களுக்கான சேவை மையமான இதில், வெளியூர்களில் இருந்து தனியாகப் பயணம் செய்து வரும் பெண்கள் மற்றும் மொழி தெரியாதவர்களுக்கு உதவி செய்ய ஒரு ஹெல்ப் டெஸ்க் இயங்குகிறது. இதில் மொழிப்பெயர்ப்பாளர்கள் இருவர் இருக்கின்றனர்.

ரயில் நிலையம் வந்துசேரும் பெண்கள் இங்கிருந்து தங்களின் இருப்பிடத்துக்குச் செல்ல கேப் புக்கிங் மற்றும் ஆட்டோ புக்கிங் வசதியும் இருக்கிறது. நம்பகமான ஆட்டோ ஓட்டுநர்களின் தொலைபேசி எண்களை நாங்கள் பதிந்து வைத்திருக்கிறோம். அதைப் பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், அந்தப் பெண்கள் பத்திரமாக வீடு சென்று சேர்ந்தார்களா என்பது ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும். தவிர, வயதான மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண் பயணிகளுக்கு வீல் சேர் வசதியும் இங்கு செய்துதரப்படுகிறது'' என்றார் பிரபாகரன்.

விரைவில் மதுரை, திருச்சி, சேலம் போன்ற அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும், குளிர்சாதன வசதியுடன் இந்தச் சேவை மையங்கள் நிறுவப்பட உள்ளன. இவற்றைப் பற்றி பெண்கள் அறியும்விதமாக ரயில் நிலையங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் நிறுவ உள்ளது ரயில்வே துறை.

ஏற்கெனவே, தமிழகம் எங்கும் பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்குப் பாலூட்டும் அறைகளை அமைத்து வசதி செய்து தந்தது மாநில அரசு. இப்போது அது ரயில் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ளது மகிழ்ச்சிகரமானது. சமீபகாலமாக, கழிப்பறை, மாதவிடாய், பாலூட்டும் சிரமங்கள் என பெண்களுக்கான அவசியத் தேவைகள் பற்றி பரவலாகப் பேசப்படுவதும், அது அதிகார மையத்தால் கவனிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


பெண்களுக்கான இந்த நல்ல திட்டத்துக்கு பொக்கே!


- எஸ்.எம். கோமதி(மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: கெஸன்ட்ரா இவாஞ்சலின்(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close