Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைகோ வழக்கில் அக். 20-ல் தீர்ப்பு 

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில் வரும் 20-ம் தேதி சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

கடந்த 21.10.2008 அன்று சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பின்கீழ் நடைபெற்ற உள்ளரங்கக் கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் வைகோவின் பேச்சு சட்டவிரோத (தடுப்பு) நடவடிக்கைச் சட்டம் பிரிவு 13 (i)(b) கீழும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-A இன் கீழும் வழக்கு அப்போதைய தி.மு.க. அரசால் தொடரப்பட்டது.

அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. அரசு சார்பில் இந்த வழக்கை நடத்த சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு, வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்பு தீர்ப்புக்காக 20.10.2016-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ