Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடும்பத்தை இணைத்த 'வாட்ஸ்அப்'... தடதடக்க வைத்த ரயில் பயணம்! (வீடியோ)

ஆன்மீக பயணத்துக்காகச் சென்ற முதியவர், உடல் நலக்குறைவால் ரயிலில் மயங்கி விழுந்துள்ளார். அவர் குறித்த விவரங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டது. அதன்மூலம் அவர் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி கேரளாவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அந்த ரயிலில் பயணிகள் இறங்கிய பிறகு ரயில்பெட்டியை சுத்தம் செய்ய எக்ஸ்பிரஸ் ரயில், பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு சென்றது. பிட்லைனில் ரயில் பெட்டியை சுத்தம் செய்த போது முதியவர் ஒருவர் நிர்வாணமாக ரயில் பெட்டிக்குள் மயங்கி கிடந்தார். அவர் யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.

இதையடுத்து ரயில்வே அதிகாரிகளுக்கும், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர், சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகனை அனுப்பி வைத்தார். முதியவரின் உடலில் உயிர் இருந்தது தெரியவந்தது. உடனடியாக சமூக சேவகர் வெங்டேசனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். போலீஸாரும், வெங்கடேசனும் சேர்ந்து ஏ.சி ரயில் பெட்டியில் வழங்கப்படும் பெட்ஷீட்டை, முதியவருக்கு வேஷ்டியாக கட்டிவிட்டனர். பிறகு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பேட்டரி கார் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு  அழைத்து வந்து போரூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

முதியவர் மலையாளத்தில் பேசினார். இதனால் மலையாளம் தெரிந்த போலீஸ் மணீஷ் மூலம் முதியவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது முதியவரின் பெயர் ஏ.கே. கோபாலன் (75) என்றும், தச்சுதொழிலாளியாக வேலைப்பார்த்ததும், கேரளா, கூடபுழா, சாலக்குடியை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரிந்தன.

கோபாலனிடம் பேசிய விவரங்களை வெங்கடேஷ், தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். பிறகு அந்த வீடியோவை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிரைவர்களால் நடத்தப்படும் சமூக சேவை அமைப்பான நல்ல சமாரியன் மீட்பர்கள் குழுவிடம் வெங்கடேஷ் ஒப்படைத்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்திலும் பதிவிடப்பட்டது. குறிப்பாக வாட்ஸ்அப் மூலம் கேரளாவில் உள்ள ரயில் டிரைவர் பௌத்திரன் என்பவருக்கு அனுப்பப்பட்டது.

 

 

கோபாலன் தெரிவித்த முகவரிக்கு சென்ற பௌத்திரன், அவரது வீட்டை கடந்த 15-ம் தேதி கண்டுப்பிடித்தார். பிறகு கோபாலனின் மகன் சந்தோஷின் செல்போன் நம்பரை வெங்கடேஷனுக்கு அனுப்பி வைத்தார். வெங்கடேசனும், சந்தோஷிடம் பேசினர். இதையடுத்து பெங்களூரில் வேலைபார்த்து வரும் சந்தோஷ், நேற்று சென்னை வந்தார். அவரிடம் கோபாலன் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து வெங்கடேஷ் கூறுகையில், "கோபாலன், ஒவ்வொரு புண்ணியதலங்களுக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கிளம்பியுள்ளார். தற்போது பழனிக்குச் செல்ல அவர் திட்டமிட்டு வந்துள்ளார். வரும்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் மயங்கி விழுந்தார். ஆனால் அதை பயணிகள் யாரும் கவனிக்கவில்லை. இந்த சமயத்தில் அவரது உடமைகள், ஏன் அவர் அணிந்திருந்த உடைகளை கூட யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதனால் நிர்வாணமாக ரயில் பெட்டியிலேயே மயங்கி கிடந்துள்ளார். எனக்கு தகவல் கிடைத்ததும் அவரை மீட்டு மகனிடம் ஒப்படைத்துள்ளேன். இதற்கு காரணம் நல்ல சமாரியன் மீட்பு குழுவினரின் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட வீடியோ பதிவுதான். மீட்கப்பட்ட கோபாலனுக்கு வரும் 20-ம் தேதி பிறந்தநாள்" என்றார். 
 

- எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close