Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் இரண்டாவது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் இரண்டாவது நாளாக இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டனர்.

அதேபோல், சீர்காழி, புதுக்கோட்டை, கும்பகோணம், திருவண்ணாமலை, அரக்கோணம், ஶ்ரீவில்லிப்புத்தூர் உள்பட தமிழகம் முழுவதும் விவசாயிகள் இரண்டாவது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று முதல் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் 16  ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ