Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாத்தூரில் இளைஞர் சுட்டுக்கொலை: கிணற்றில் துப்பாக்கி கண்டெடுப்பு

சாத்தூர் அருகே ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் உள்ள பழைய கிணற்றில் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

சாத்தூர் அருகே சில நாட்கள் முன்பு பஸ்சில் பயணம் செய்த கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவரை மர்மநபர்கள் சுட்டுக் கொலை செய்தனர். இதுதொடர்பாக ரபீக் என்பவர் மதுரை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சரணடைந்தார். சாத்தூர் காவல்துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர் . அதன்படி, ரபீக் கொடுத்த தகவலின்படி இன்று காலை சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் பழைய கிணற்றில் தூக்கி வீசப்பட்ட, கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மகாலட்சுமி என்ற பெண்ணிடம் நடத்திய விசாரணையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரபீக் மற்றும் மகாலட்சுமியிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ