Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சித் தேர்தல் ரத்து தொடரும்: உயர் நீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், தடை உத்தரவு மேலும் 4 வாரங்களுக்குத் தொடரும் என்றும், இது தொடர்பாக திமுக, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, தேர்தலை டிசம்பர் மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் கூட்டு சேர்ந்துள்ளது என்று வாதிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், இடஒதுக்கீடு கோரிக்கைக்காக வந்த வழக்கில் தேர்தலை ரத்து செய்தது செல்லாது. வேட்பு மனுவில் குற்றப்பின்னணி தகவல் தராதவர்களின் மனுவை நிராகரிக்க இயலாது என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து, தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு தொடரும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக திமுக, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ