Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட தடையில்லை: லக்கானி அறிவிப்பு

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடத் தடையில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும்  திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ சீனுவேல் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கு ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க., தி.மு.க.  வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். 

இதனிடையே, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி ஆகியோர் போட்டியிட தடையில்லை. இவர்களுக்கு தடை விதிப்பது பற்றி இதுவரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. 2 பேர் மீதும் தேர்தல் விதிமீறல் விதி இருந்தாலும் போட்டியிடத் தடையில்லை என்று விளக்கம் அளித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ