Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பம்: திமுக அறிவிப்பு

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.

விண்ணப்ப கட்டணம் ரூ.25,000 என்றும், விண்ணப்ப படிவம் ரூ.1000 என்றும் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும், போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் அக்டோபர் 21-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ