Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தண்டவாளத்தில் சமைத்து போராட்டம் நடத்திய விவசாயிகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் ரயில் தண்டவாளத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ஒப்பாரி வைத்தும், அடுப்பு மூட்டி, சமையல் செய்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

எடிட்டர் சாய்ஸ்