Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழகம் மற்றும் கர்நாடகா தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு வாதம் தொடங்கியது.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், நாடாளுமன்றம், அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக முறையிட மாநில அரசுக்கு உரிமையில்லை. நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா முறையிட முடியாது. நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து கர்நாடக, தமிழக தரப்பு கோரிக்கையை ஏற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே உத்தரவிட்டபடி 2000 கன அடி நீர் திறக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இதனை பின்பற்ற வேண்டும். சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை இருமாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும். ஜா அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் வரும் 25-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். நாளையும் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தது.


 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close