Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓடும் பேருந்தில் பச்சையப்பன்- நந்தனம் கல்லூரி மாணவர்கள் மோதல்

சென்னையில் ஓடும் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், நந்தனம் கல்லூரி மாணவர்களும் கற்களை வீசி பயங்கரமாக மோதிக் கொண்டனர். இந்த மோதலில் ஓட்டுநர் உள்பட 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

சென்னை புரசைவாக்கத்தில் இன்று பிற்பகலில் மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, பச்சையப்பன் மற்றும் நந்தம் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இதில், இரண்டு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின்போது இரண்டு தரப்பும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், பேருந்து சேதம் அடைந்ததோடு, ஓட்டுநர் மற்றும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட 22 பேரை பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close