Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 தொகுதிகளில் களம் இறங்கியது பறக்கும் படை!

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தாெகுதிகளில் இன்று முதல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, வரும் நவம்பர் 3-ம் தேதி தேர்தல் பார்வையாளர்கள் தமிழகம் வருகிறார்கள். தொகுதிக்கு 2 பேர் வீதம் 6 பேர் வர இருக்கின்றனர். தேவைப்பட்டால் கூடுதலாக வரவழைக்கப்படுவார்கள். இன்று முதல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபடுவர்" என்றார்.

இதனிடையே, தஞ்சாவூரில் 6 பறக்கும் படைகள் மற்றும் 3 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அளிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ