Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓபிஎஸ் நடத்தும் அமைச்சரவை கூட்டம்

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் அவர் அனுமதிக்கப்பட்டு 27வது நாள் ஆகிறது.

இந்த நிலையில், முதல்வரிடம் இருந்த துறைகள் அண்மையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்படைத்து உத்தரவிட்டார். இதனிடையே, தமிழகத்தில் காவிரி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். நாளை காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரிகள் நியமனம் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ