Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘இதனால் தான் நாங்கள் பெளத்தத்துக்கு மாறினோம்...! ’ தலித் மருத்துவர்கள்


மிழகத்தில் உள்ள  ஓர் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர், தனக்குத் தேவையான ரத்தத்தை உயர் சாதியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்துதான் பெற வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறார்.


சாதித் தீண்டாமை

ஆன்டிராய்டு போனில் பாரதியார் app-ல் சாதிகள் இல்லையடி பாப்பா என்று குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்கும் கால கட்டத்திலும் இத்தகையச் சாதித் தீண்டாமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு துறைகளிலும்  தொழில் சார்ந்த தீண்டாமைகளும் தொடர்கின்றன. நவீனத் தீண்டாமைகளுக்கு எதிராகத் தமிழகத்தைச் சேர்ந்த 47 டாக்டர்கள் பெளத்த மதத்துக்கு மாறி இருக்கின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரியில் 1956-ம் ஆண்டு அக்டோபர்  14-ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை, அதாவது  60 ஆண்டுகளுக்கு முன்னால், இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார் அம்பேத்கர். இதை நினைவுகூறும் வகையில் கடந்த 16-ம் தேதி சென்னையில் 47 டாக்டர்கள் பெளத்த மதத்துக்கு மாறி இருக்கின்றனர். திருச்சியைச் சேர்ந்த பிரபல புற்றுநோய் மருத்துவர்  டாக்டர் ஜி.கோவிந்த ராஜ், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் எம்.வி. தம்பையா,  மயக்கவியல் நிபுணர் டாக்டர் ஜானகிராமன் உள்ளிட்ட 47 பேர் பெளத்த மதத்தில் இணைந்துள்ளனர்


அம்பேத்கரின் கோட்பாடு

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மக்கள் மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஆனந்திடம் பேசினோம். 

"நாங்கள் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்றோம். அவருடைய கோட்பாடுகளை மதிப்பதன் மூலம், ஏற்றுக்கொள்வதன் மூலம் பெளத்த மதத்துக்கு மாறுகின்றோம். கி.பி 2-ம் நூற்றாண்டில் குஷ்ய மித்திர சுங்கன் என்ற மன்னர்,  சதுர்வர்ம முறையை இந்தியாவில் ஏற்படுத்தினார். அப்போது பெளத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அவரின் சதுர்வர்ம முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ஏற்றுக்கொள்ளாதவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். அவர்களின் வழி வந்தவர்கள்தான் இப்போது தலித்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இதை வரலாற்றுப்பூர்வமாக அம்பேத்கர் நிரூபித்துள்ளார்.

தாய் மதம் திரும்புதல்

இதன் காரணமாகத்தான் இப்போது தலித்கள் பெளத்த மதத்துக்கு மாறுகின்றனர். நாங்கள் வரலாற்று ரீதியாக பெளத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். அம்பேத்கர் இதனை தாய்மதம் திரும்புதல் என்று கூறுகிறார். எனவே நாங்கள் மதம் மாறவில்லை. தாய் மதத்துக்குத் திரும்புகின்றோம்.

ஒரு கோவிலின் பூசாரியாகவோ, அர்ச்சகராகவோ ஆகும் உரிமை தலித்களுக்கு இல்லை. ஆனால், எங்களுடைய தாய் மதமான பெளத்தத்தில் எல்லா உரிமைகளும் உள்ளன. இந்து மதத்தில் இருந்து தீண்டாமை அனுபவிப்பதில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கின்றோம்.

தலித்கள் மீது  அனைத்துவிதமான தீண்டாமைகளும் கடைபிடிக்கப்படுகின்றன.  நவீன தீண்டாமை, பொருளாதாரத் தீண்டாமை இன்னும் இருக்கிறது. கிராமப்புறங்களில் டாக்டராகப் பணிபுரியும்போது, தங்குவதற்கு வீடு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். தலித்கள் மீது கடைபிடிக்கும் தீண்டாமைகள் எங்கள் மீதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதனால்தான் நாங்கள் தாய்மதத்துக்குத் திரும்பினோம்" என்றார்.


- கே.பாலசுப்பிரமணி

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close