Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈ.வி.கே.எஸ் மீது நடவடிக்கையா? திருநாவுக்கரசர் பதில் 

திருச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத்தில் பங்கேற்காத முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார். 

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், காங்கிரஸ் சார்பில் திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்காத முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், திருச்சி உண்ணாவிரத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. உண்ணாவிரதத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்காமல் முதல்வரின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றது தவறில்லை என்றார்.

மேலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டால் சந்தோஷசம்தான் என்றார் திருநாவுக்கரசர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ