Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தி: தூத்துக்குடி மளிகைக்கடைக்காரர் கைது 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஃபேஸ்புகில் வதந்தி பரப்பியதாக கூறி தூத்துக்குடியை சேர்ந்த மளிகைக் கடைக்காரர் சகாயத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இன்று 28 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரபரப்பப்பட்டு வருகின்றன.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையும் மீறி வதந்தி பரப்பரப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் உடல்நிலை குறித்து ஃபேஸ்புக்கில் வதந்தி பரபரப்பியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த மளிகைக்கடைக்காரர் சகாயம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ