Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமஜெயம் கொலை வழக்கில் 2017 ஜனவரி 18 வரை சிபிசிஐடிக்கு அவகாசம்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடிக்கு அடுத்தாண்டு ஜனவரி 18-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம் மதுரை கிளை.

சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும், திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா  தொடர்ந்த வழக்கு, இரண்டு வருடத்துக்கும் மேல் மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் உள்ளது. 

ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரும் மனு மீதான விசாரணைக்கு  வரும்போதெல்லாம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள்  ரகசிய அறிக்கை ஒன்றை கொடுக்கிறார்கள். அதைப் பார்த்து விட்டு நீதிபதிகள் அவகாசம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

கொலை வழக்கு தொடர்பாக ஒன்பதாவது ரகசிய அறிக்கையை சிபிசிஐடி போலீசார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த திங்கட்கிழமையன்று தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 19-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

அதன்படி, வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, 2017 ஜனவரி 18க்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசுக்கு மீண்டும் அவகாசம் வழங்கியது.

கொலை நடந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை  காவல்துறையினர் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

சி.ய.ஆனந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ