Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளியன்று வேலை நிறுத்தம் 

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தீபாவளியன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 25 சதவீதம் போனஸ் உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகத்துடன் ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, அக்டோபர் 28-ம் தேதி இரவு 8 முதல் 29-ம் தேதி இரவு 8 மணி வரை சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனிடையே நிர்வாகத்துக்கும், ஊழியர் சங்கத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை தற்போது வரை நடைபெற்று வருகிறது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close