Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆம்னி பேருந்து கட்டண வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்னி பேருந்துகளில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் வசூலித்த டிக்கெட் கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து ஏற்றது. இந்த வழக்கை விசாரித்த நாகமுத்து, முரளிதரன் அமர்வு, தற்போது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள புதிய கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

மேலும், இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்ட நீதிபதி, மீறி அதிக கட்டணம் வசூல் செய்ததாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

சண்.சரவணக்குமார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close