Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 தொகுதிகளில் போட்டியா? திருநாவுக்கரசர் பதில்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்று அறிவித்தது அதிமுக தலைமை.

இந்த நிலையில், மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடுமா என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், "கடந்த மே மாதம் 3 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. புதுச்சேரி நெல்லிக்தோப்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதன் அடிப்படையில் இந்த தேர்தலில் போட்டியிருக்கும். மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடுவது, வேண்டாமா என்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து நாளை முடிவு எடுக்கப்படும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close