Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திராவிட கட்சிகள் கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்திக்கிறது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

திராவிட இயக்கங்களும் கூட்டணி அமைத்துதான் தற்போது வரை தேர்தலை சந்திக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசி்ய அவர், பணப்பட்டுவாடாவை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தலை நடத்துகிறது தேர்தல் ஆணையம் என்று குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் பூரணமாக நலம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறிய இளங்கோவன், காங்கிரஸ் கட்சிதான் மத்தியிலும், தமிழகத்திலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ