Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுகவினர் ஃபேஸ்புக் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

திமுகவினரின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்படுவதைத் தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

சென்னை அப்போலாே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரபரப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக் மூலம் வதந்தி பரபரப்பியதாக கூறி இதுவரை 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, திமுகவினரின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில், திமுகவினரின் வலைதளங்கள் முடக்கப்படுவதை தடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. திமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், ராஜீவ்காந்தி சார்பில் வழக்கறிஞர் முறையிட்டுள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், மனுவை நாளை விசாரிப்பதாக அறிவித்தது.

எடிட்டர் சாய்ஸ்