Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செந்தில் பாலாஜி, கே.சி.பழனிசாமி போட்டியிட தடை கோரி வழக்கு!

அரவக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி ஆகியோர் போட்டியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி தேர்தல் ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி.பழனிசாமியும் போட்டியிட்டனர்.

இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி, கே.சி.பழனிசாமி ஆகியோர் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்ட அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு இன்று தொடர்ந்துள்ளார்.

அதில், அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தொகுதியில் 2 பேரும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close