Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைகோவை விடுவித்தது நீதிமன்றம்

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விடுதலை செய்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 21.10.2008 அன்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பின்கீழ் நடைபெற்ற உள்ளரங்கக் கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் வைகோவின் பேச்சு சட்டவிரோத (தடுப்பு) நடவடிக்கைச் சட்டம் பிரிவு 13 (i)(b) கீழும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-A இன் கீழும் வழக்கு அப்போதைய தி.மு.க. அரசால் தொடரப்பட்டது.

அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. அரசு சார்பில் இந்த வழக்கை நடத்த சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு, வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்பு கடந்த 20-ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அருள்முருகன், கியூ பிரிவு போலீஸார் கூறிய குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கில் இருந்து வைகோவை விடுதலை செய்தார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ''கருணாநிதி முதல்வராக இருந்தபோது என் மீது வழக்குப் போடப்பட்டது. என் மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது'' என்றார்.

படங்கள்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ