Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஒருமுறை கத்தியைத் தூக்கினால்...!' -நெல்லை ரவுடிக்கு நேர்ந்த கதி

மும்பை முதல் தமிழகம் வரை ரவுடியிஸத்தால் கோலோச்சிய ஒரு ரவுடியின் மரணம் சர்வசாதாரணமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. கொலை செய்தவரே மனசாட்சிக்குப் பயந்து போலீஸிடம் உண்மைகளை சொன்னபிறகு ரவுடியின் கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

அந்த சம்பவத்தின் நிஜங்கள் இது!

கடந்த அக்டோபர் 10-ம் தேதி நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளம் கிராம நிர்வாக அலுவலரிடம் அதே ஊரைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் சில வாரங்களுக்கு முன்பு சரண் அடைந்தார். அப்போது அவர் சொன்ன தகவல், வாகைகுளம் கிராம நிர்வாக அலுவலர் கணேஷனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "அய்யா, என்னுடைய உறவினர் அய்யப்பனை நானும், என்னுடைய நண்பர்களும் சேர்ந்து கடந்த ஜூலை 25ல் கொலை செய்து பிராஞ்சேரி குளத்துக்குள் உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசி விட்டோம்" என்று தெரிவித்தார். இதையடுத்து அம்பாசமுத்திரம் போலீசுக்கு வாகைகுளம் வி.ஏ.ஓ கணேஷன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார், பிராஞ்சேரி குளத்திலிருந்து அழுகிய நிலையில் கிடந்த உடலை போலீஸார் மீட்டனர்.

யார் இந்த அய்யப்பன்?

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் அய்யப்பன். வாகைகுளத்தில் தயாரிக்கப்படும் குத்துவிளக்குகள் தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. குத்துவிளக்கு தயாரிக்கும் வியாபாரிகளிடம் அய்யப்பன், மாமூல் கேட்பது வழக்கம். அய்யப்பன், வியாபாரி அகத்தியனிடம் மாமூல் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அகத்தியனின் மகன் ராஜை அய்யப்பன் கொலை செய்கிறார். இதுதான் அவரது முதல் கொலை. அப்போது அய்யப்பனுக்கு 20 வயது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அய்யப்பனுக்கு அங்கு சில ரவுடி கும்பலுடன் தொடர்பு கிடைக்கிறது. அவர்களுக்காக பல கொலைகளை செய்கிறார் அய்யப்பன்.

தொடர்ந்து நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் கோயில் திருவிழா தகராறில் 30.5.2009ல் ஒரே நேரத்தில் கணேசன், சுடலை, முத்துக்குமார் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலையிலும் அய்யப்பன் கைதாகிறார். இந்த சமயத்தில் சென்னை எண்ணூரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் அடியாளாக மாறுகிறார் அய்யப்பன். அப்போது அந்த ரவுடியின் தம்பியை கொலை செய்ய மற்றொரு ரவுடி கும்பல் திட்டமிடுகிறது. தஞ்சாவூரில் வைத்து கொலை செய்ய திட்டமிடப்படுகிறது. இந்த தகவல் கிடைத்ததும் அய்யப்பன், வெடிகுண்டுகளுடன் தஞ்சாவூர் செல்கிறார். அப்போது போலீஸில் சிக்குகிறார். திருச்சி சிறையிலிருந்து ஜூலை 22-ம் தேதி ஜாமீனில் வெளியேறிய அய்யப்பன், வாகைகுளம் வருகிறார். அங்கு அவரது உறவினர் செல்வகணேஷிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்தபோது அய்யப்பனை கொன்றதாக செல்வகணேஷ் போலீஸிடம் தெரிவித்துள்ளார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "அய்யப்பன் மீது மும்பையில் தொடங்கி தமிழகம் முழுவதும் வழக்குகள் உள்ளன. அவர் மீது 11 கொலை வழக்குகள் உள்பட 28 வழக்குகள் உள்ளன. அய்யப்பனுக்கு ரவுடி கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அத்தகைய பிரபலமான ரவுடியின் மரணம் சர்வசாதாரணமாக நடந்துள்ளது. குடிபோதையில் இருந்த அவரை தம்புல்ஸாலேயே தலையில் அடித்தே கொன்றுள்ளனர் செல்வகணேசும், அவரது நண்பர்களும். இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்வகணேஷ் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

செல்வகணேஷ், வாகைகுளத்தில் குத்துவிளக்கு மற்றும் சாமி சிலைகளை செய்யும் வேலை செய்து வருகிறார். அய்யப்பனை கொலை செய்தபிறகு சாமி சிலைகளை செய்யும்போது செல்வகணேஷின் மனசாட்சி அவரை உறுத்தியுள்ளது. இதனால்தான் அவர் வி.ஏ.ஓ.விடம் சரண் அடைந்திருக்கிறார்" என்றனர்.

"அய்யப்பனின் குருவாக வாகைகுளத்தைச் சேர்ந்த ராஜ் என்பவர் இருந்துள்ளார். இவர் திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற போது பிராஞ்சேரி குளம் அருகே கொலை செய்யப்பட்டுள்ளார். அதே இடத்தில்தான் தற்போது அய்யப்பனின் உடலும் வீசப்பட்டுள்ளது. நெல்லை சுத்தமல்லியில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி கிட்டப்பாவுக்கும், கொலை செய்யப்பட்ட ரவுடி மதனுக்கும் நெருங்கிய கூட்டாளி" என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். 

கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே சாவு என்பது அய்யப்பனின் வாழ்க்கையில் நிஜமாகியிருக்கிறது.

நமது நிருபர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close