Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முடக்கப்பட்ட இணையதளம்...! களவாடப்பட்டதா ஆவணங்கள்..?

மிழக அரசு இணையதளத்தின் முக்கியப் பக்கங்கள் முடக்கப்பட்டிருப்பது அரசு வட்டாரத்தில் பல அதிர்ச்சிகளை கிளப்பியுள்ளது.

தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in அரசின் அதிகாரபூர்வ இணையதளமாக செயல்பட்டுவருகிறது. இதில் அரசின் பல்வேறு துறைகளின் அறிக்கைகள் நிகழ்ச்சி நிரல்கள், கடந்த கால நிதிநிலை அறிக்கைகள், அரசு ஆணைகள், முதல்வர் அறிவிப்புகள் எனப் பல முக்கியக் குறிப்புகளும், தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான கருத்துகள் இதில் இடம்பெற்றிருக்கும். இதனால் அரசுத் துறைகளின் அதிகாரபூர்வமான செய்திகளை இதன்மூலமே பெற்றுவருகின்றனர் பொதுமக்கள்.

இந்நிலையில் இந்த இணையதளம் நேற்று (புதன்கிழமை) திடீரென முடக்கப்பட்டிருக்கிறது.

இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என்கின்றனர் விபரமறிந்த சிலர். அரசுக்கான அனைத்து நகல் ஆவணங்களும் இதில் கிடைப்பதால் தமிழகம் முழுக்க உள்ள அரசுத் துறைகளும் தங்களது பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்ளப் பயன்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் இந்த இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டிருந்தது கண்டு அதில் தகவல்களை தேட முயற்சித்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தொழில்நுட்பத்துறையை சேர்ந்த வல்லுனர்களிடம் விசாரித்தபோது இது உறுதியானது. அரசின் சமீபத்திய பல முக்கியத் தகவல்கள் அடங்கிய பக்கங்கள் முடக்கப்பட்டு இருப்பது அரசு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தளத்தின் எந்த பக்கமும் ஓப்பன் ஆகவில்லை. மேலும் பக்கங்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் காட்சி அளித்தன. மேலும், அதில் PAK CYBER SKULLZ என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. PAK CYBER SKULLZ என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருப்பது இதன்பின்னணியில் அபாயகரமான கும்பல் ஏதும் உள்ளதாக என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இணையதளத்தின் பாஸ்வேர்டு திருடப்பட்டிருப்பதால் அன்றைய தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டம் குறித்த புகைப்படங்கள், அமைச்சர்களின் கலந்தாய்வுக் கூட்டங்கள் தொடர்பான செய்திகள் உள்ளிட்டவைகளை இணையதளத்தில் பதிவேற்ற முடியாமல் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஊழியர்கள் திணறினர். PAK CYBER SKULLZ என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாத குழு ஏதேனும் இந்த சதிச் செயலில் ஈடுபட்டிருப்பார்களான என்ற கோணத்தில் இது விசாரிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து அரசு இணையதளத்தை பராமரித்துவரும் நிக் (NIC) நிறுவன அதிகாரிகளை தொடர்புகொண்டோம். பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசினார். அரசின் இணையதளத்தை முடக்கவில்லை. டேட்டா ஆக்ஸைஸை கையப்படுத்தி அதில் இடம்பெற்றிருந்த பல கண்டென்டை எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

டேட்டாக்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. தகவல் தெரிந்ததும் உடனடியாக செர்ட்டின் மற்றும் சைபர் குற்றப்பிரிவுக்கும் புகார் அளித்து விசாரணை நடந்துவருகிறது. முதற்கட்ட விசாரணையில் அது பாகிஸ்தான் நாட்டிலிருந்து நடந்த முயற்சி என்பது உறுதியாகி இருக்கிறது. பொதுவாக அரசு வங்கி இணையதளமாகவோ அல்லது வேறு எந்த பணப்பரிவர்த்தனை நிறுவனத்தின் இணையதளமாகவோ இருந்து முடக்கியிருந்தால் அதில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசின் இணையதளமான இதில் பெரும்பாலும் மக்களுக்கான பொது ஆவணங்கள்தான் பராமரிக்கப்படுகின்றன. ரகசியமான ஆவணங்கள், குறியீடுகள் என்று எதுவும் பராமரிக்கப்படவில்லை. முழுக்க முழுக்க இது ஒரு தகவல் பெறும் இணையதளம்தான்.எந்த ஒரு பொதுஜனமும் எந்த டிவைஸிலிருந்தும் தனக்குவேண்டிய தகவல்களை எளிதில் பெறுவதற்கான அரசு இணையதளம் என்பதால் இதை முடக்கியதன்மூலம் யாரும் எந்த லாபமும் அடையமுடியாது.

இருப்பினும் ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. இணையதளம் மீண்டும் சீரமைக்கப்படும் பணி நடந்து வருகிறது. இப்படி ஒரு முயற்சி நடந்திருப்பதால் மீண்டும் முந்தைய லிங்க்குகளிலேயே டாக்குமெண்டுகளை கொடுப்பதில் சிக்கல் உள்ளது. எனவே அனைத்து ஆவணங்களுக்கும் புதிய லிங்குகள் கொடுக்க முடிவெடுத்திருக்கிறோம். அவசர கதியில் செய்து மீண்டும் இம்மாதிரி தவறு நடந்துவிடக்கூடாது என்பதால் முன்னைவிட பாதுகாப்பான அம்சங்களுடன் வடிவமைத்து வருகிறோம். அதுதான் தாமதத்துக்குக் காரணம். இரண்டொரு தினங்களில் மீண்டும் இணையதளம் இயங்கும்” என்றார்.மீண்டும் இம்மாதிரி நடக்காதபடி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்... என்றோம்.

“ இது பாகிஸ்தான் சதி என்றாலும் பாகிஸ்தானில் உள்ள ஒரு டிவைஸிலிருந்துதான் இப்படி ஒரு முயற்சியை செய்யமுடியும் என்பதில்லை. எங்கிருந்தும் இதையாரும் செய்யலாம் என்பதால் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டின் ஆக்ஸஸை துண்டிக்க முடியாது. அதுமட்டுமின்றி இன்று எல்லா நாட்டிலும் தமிழர்கள் வசிக்கின்றனர். இதனால் நாடுகளுக்கான கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கமுடியாது. மீண்டும் வடிவமைக்கப்படும் தளம் கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் என்பதை உறுதியாக சொல்வோம். “ என்றார்.

- எஸ்.கிருபாகரன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close