Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாமீனில் வந்த போலி டாக்டர் மீண்டும் மருத்துவம் பார்த்து ஒருவர் பலி

திருவண்ணாமலையில் போலி மருத்துவர் அருணிடம் சிகிச்சை பெற்ற, 30 வயது சுரேஷ் என்பவர் தவறான சிகிச்சையளிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார். 

அரணாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர்‌ போலி மருத்துவரான அருண் என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அருண் ஊசி போட்ட அரைமணி நேரத்தில் சுரேஷ் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

காவல்துறை விசாரணையில், அருண் மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவமனை நடத்தி வந்த குற்றத்துக்காக ஏற்கெனவே இரண்டு முறை கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாகி் உள்ள அருணை காவல்துறை தேடி வருகிறது.

ஏற்கெனவே இரண்டு முறை கைதான போலி மருத்துவர், மீண்டும்  மருத்துவமனை நடத்தி வந்ததை  தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிக்கத் தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close