Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணம்...! மக்கள் கருத்து... சர்வே முடிவுகள்...! #PeopleSurvey

ண்டிகைக் காலம் என்றாலே செலவுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களாக இருந்தால், சொல்லவே வேண்டியதில்லை. திட்டமிட்டு வைத்திருந்த செலவுகளுக்கு மத்தியில், ஊருக்குச் செல்வதற்கான ஆம்னி பஸ்களின் கட்டணம் வெகுவாக உயர்ந்து உள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக, “பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணம்...! உங்கள் கருத்து என்ன?” என்ற தலைப்பில் நேற்று விகடன் இணையதளத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினோம். சர்வேயில் பலரும் ஆர்வத்தோடு பதிலளித்து உள்ளனர். "செலவுகளுக்கு மத்தியில் ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்தியது அதிகப்படியான சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது"  என பெரும்பாலானோர் தங்கள் பதிலாகத் தெரிவித்துள்ளனர்.  மேலும் "பேருந்து கட்டணத்தை மட்டுமே அதிகமாக வசூலிக்கிறார்கள். அதற்கேற்றவாறு வசதிகள் எதுவும் செய்து தருவதில்லை" என 97.5 சதவிகிதம் பேர் பதிலளித்துள்ளனர். 

"ஆம்னி பேருந்துகளால் உங்களுக்கு ஏற்படும் அசெளகர்யங்கள் மற்றும் கட்டணத்தைக் குறைக்க வேறு எந்த மாதிரியான மாற்றங்கள் செய்யலாம்?" என கேட்டிருந்தோம். 

அதற்கு, பெரும்பாலான மக்கள்,  "ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதில் பண்டிகைக் காலத்தில் கட்டண மாற்றங்கள் செய்யக் கூடாது" என கூறியுள்ளனர். மேலும், தமிழக அரசு ஆம்னி பஸ்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நடத்த வேண்டும் எனவும் பதிலளித்துள்ளனர். விகடன் நடத்திய சர்வேக்கான பதில்கள் கீழே...

1. ஆம்னி பஸ் கட்டணத்தைப் பண்டிகைக் காலத்தில் உயர்த்தியது?

2. கட்டணத்துக்கு ஏற்றவாறு வசதிகள் செய்து தரப்படுகின்றனவா?

3. புக் செய்யப்படும் இருக்கைகள் பயணத்தின்போது ஒதுக்கப்படுகின்றனவா?

4. ஆன்லைனில் டிக்கெட்டை எளிதாக புக் செய்ய முடிகிறதா?

5. முன்கூட்டியே புக் செய்யும் டிக்கெட்களுக்கும், பயணத்தின்போது நேரில் சென்று வாங்கும் டிக்கெட்களுக்கும் கட்டணம் வேறுபடுகிறதா?

6. ஆம்னி பஸ்களின் கட்டண உயர்வுமீது தமிழக அரசு தலையிடாமல் இருப்பது?

7. ஆம்னி பேருந்துகளால் உங்களுக்கு ஏற்படும் அசெளகர்யங்கள், அதன் கட்டணத்தைக் குறைக்க வேறு எந்த மாதிரியான மாற்றங்கள் குறித்துத் தங்கள் கருத்து? என்ற கேள்விக்கு வாசகர்கள் அளித்துள்ள ஆலோசனைகள்

*Govt should fix the tariff for onnu buses for throughout the year if they not obeying govt should cancel the route and bus permit                                
Government should involve in this    

*Need govt intervention to check the price hike during festive and weekends                

*Railways should finish all the double rail track conversion quickly and increase the number of regular trains and add special trains during festival seasons  towards south. This will end OMNI bus operators lobby as well as benefits passengers. 
following a same price cost every time irrespective of festival occasions                

*BOTH OMNI OWNERS AND CORRUPT OFFICIALS ARE HANDS IN GLOVE.  IT IS AN EYEWASH THAT GOVERNMENT WILL TAKE STEP WHEN WE REGISTER THEIR COMPLAINT NUMBER.  EITHER TELEPHONE NUMBER WILL NOT BE WORKING, OR WILL NOT GET ATTENDED MOSTLY.  EVEN IF COMPLAINT IS REGISTERED, WE WILL NOT BE ABLE TO GET THE STATUS OR REDRESSAL.                                                  

*ithula karuthu solla onnum illa ,arisiyal vathikalaividava evanunga athikama vaankuranuva....unaku viruppam irunthal poo..ellaiyendral govt bus eruku unaku..      

*Will increase the public transport, with facility         

*Maintain the government buses properly        

*every ticket should be sold online with nominal price            

*Proper monitoring should be done by government        

*Toothless governments can not do anything.         

*Can introduce tatkal method as like as railways. Price should be fixed and not be changed for any occasions.              

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.          

- நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ