Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ம.ம.க ஆதரவு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.
 
மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரசாரம் செய்வார்கள். ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக தமிழக சட்டமன்றத்தில் பணியாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close