Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்...!

மிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் ஒன்று சேலம். கிட்டத்தட்ட 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமில்லை. முறையான திட்டமிடல் இல்லாத சாலைகளால் நெரிசல் மாநகரில் அதிகமாகவே இருந்து வந்தது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகரின் நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இரண்டு அடுக்கு மேம்பாலம் சேலத்தில் தான் அமைக்கப்படுகிறது. ரூ.320 கோடி மதிப்பிட்டீலான இந்த திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.  நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் வாகனங்கள் கடப்பதாக கணக்கெடுக்கப்பட்ட ஐந்து ரோடு பகுதியில்தான் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் இந்த மேம்பாலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 39 மாத கால அவகாசத்துடம் மேம்பாலப்பணிகள் நடந்து வருகிறது.

 

இரு தளங்களுடன் கட்டப்படும் இந்த மேம்பாலத்தின் முதல் தள கட்டுமானப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதற்காக சேலம் 5 ரோட்டிலிடுந்து நாலாப் புறமும் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை தாங்க வலிமை மிகுந்த 173 தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறன. அதாவது குரங்குச்சாவடியில் இருந்து  ஐந்து ரோடு வரை 15 தூண்கள், ஐந்து ரோட்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை 32 தூண்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ரெசிகாஸ் ரெஸ்டாரண்ட் வரை 38 தூண்கள், புதிய பஸ் ஸ்டாண்டு இறங்கு தளத்துக்கு 10 தூண்கள், ஏ.வி.ஆர் சந்திப்பில் இருந்து ஐந்து ரோடு வரை எட்டு தூண்கள்,  ஐந்து ரோடு முதல் அழகாபுரம் வரை 31 தூண்கள், அழகாபுரம் முதல் ராமகிருஸ்ணா பிரிவு வரை 39 தூண்கள் என மொத்தம் 173 தூண்கள் அமைக்கப்படுகிறன.

 

 

சேலத்தில் இரண்டு அடுக்கில் உருவாகும் இந்த பாலத்தில் 'செக்மென்ட் டைப்' பயன்படுத்தப்படுகிறது. அதாவது மேம்பாலத்தின் தூண்கள் எழுப்பிய பின்னர், வேறு இடங்களில் கான்கிரீட் பீம்கள் தயாரிக்கப்பட்டு, கிரேன் மூலம் கொண்டு வந்து இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து ரோட்டிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை 600 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலத்தின் ஓடுதளமானது நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. 6.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு, இரண்டு அடுக்குகளில் அமையும் இந்த பாலம்தான் தமிழகத்தின் மிக நீளமான பாலமாகும்.

- மா.விஜய்சூர்யா,

 

(மாணவப் பத்திரிகையாளர்)

 

படங்கள்: சூ.நந்தினி

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ