Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியார் நிறுவன ஊழியர் கொலை

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பைக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் தேவதாஸ். இன்று காலை அலுவலகத்துக்குச் செல்வதற்காக பைக்கில் கோயம்பேடு வந்துள்ளார். அப்போது, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே மர்ம நபர்கள், தேவதாஸை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த தேவதாஸ் உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோயம்பேடு பேருந்து நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்