Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்! 

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று விருப்ப மனு கொடுத்த 23 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

இதில், திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமி, தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிட உள்ளதாக திமுக முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

டாக்டர் சரவணன், முன்பு அழகிரி ஆதரவாளராக இருந்தவர். பாஜக, மதிமுக ஆகிய கட்சிகளில் இருந்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் திமுகவில் ஐக்கியமானார்.  

இந்த நிலையில், மேலே குறிப்பிடப்பட்ட 3 பேரும் தற்போது வேட்பாளர்களாக அறிவித்துள்ளது திமுக தலைமை.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 
 

- ஆ.விஜயானந்த்

படம்: ஆ. முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ