Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை தெரியப்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரத்தை அனைவருக்கும் தெரிவிக்க முடியாது என்று கூறி டாக்டர் ஒருவரின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 29 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அப்போலோ மருத்துவமனையும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தாலும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தெரியப்படுத்தவில்லை.

இந்த நிலையில், முதல்வர் உடல்நிலை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் பிரவீணா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், முதல்வருக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தகவலை வெளியிட வேண்டும் என அனைவரும் கோர முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.

இதனிடையே முதல்வரின் உடல்நிலை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close