Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவசாய நிலங்களில் யூகலிப்டஸ் மரங்கள் நட கிருஷ்ணசாமி எதிர்ப்பு

இந்து அறநிலையத்துறை, தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்களை நட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து திருநெல்வேலியில் நவம்பர் முதல் வாரத்தில் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள தென்கலம்புதூர், நல்லம்மாள்புரம், தென்கலம், புளியங்கொட்டாரம், பல்லிக்கோட்டை, பள்ளமடை, குப்பனாபுரம், அலவந்தான்குளம், நெல்லைதிருத்து ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பல வருடங்களாக அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.

இப்போது அவர்களுடைய நிலங்களை இந்து அறநிலையத்துறை, தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்களை நட ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறார்கள். தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை – காகித நிறுவனத்திடம் போடபட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலியில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்" என்று கூறினார்.

- ஆண்டனிராஜ் 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ