Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாமதமான வடகிழக்குப் பருவமழை..காரணம் என்ன?

மிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான வடகிழக்குப் பருவமழை 20-ம் தேதி ஆரம்பிக்கும் என சென்னை வானிலை மையம் முதலில் அறிவித்திருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி இன்னும் துவங்கவில்லை. இந்த நிலையில் 27-ம் தேதி வரை பருவமழைக்கு வாய்ப்பில்லை, 28-ம் தேதியிலிருந்து தொடங்கலாம் என சென்னை வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது.

இதற்கு காரணம் என்ன என சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், பாலச்சந்திரன் கூறும்போது, "தமிழ்நாட்டில் இப்போதைக்கு வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பில்லை. முதலில் 20-ம் தேதி தொடங்குவதாக தெரிவித்திருந்தோம். ஆனால் இன்னும் 6 நாட்களுக்கு வடகிழக்குப் பருவமழை இருக்க வாய்ப்பில்லை. பொதுவாக வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து, விலகிக் கொள்ளும்போதுதான் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் அமையும். ஆனால் இப்போது இன்னும் அதற்கான அறிகுறி தெரியவில்லை. பருவமழை தாமதமாவதற்கு காரணம், வடகிழக்கிலிருந்து காற்று வீசாமல், வடமேற்காக காற்று வீசுவதே ஆகும். 

                   வடகிழக்கு பருவமழைக்கு எதிர்பார்த்திருந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மியான்மர் நோக்கி திரும்பியுள்ளது. இதனால் மழை பெய்வது தாமதமாகியுள்ளது. இந்தியவானிலை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுப்படி, அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் வழக்கமான மழையளவினை விட இம்முறை 10% அளவு மழை குறைவாகவே இருக்கும். வழக்கமான அளவு 44 செ.மீ, எதிர்பார்க்கப்படும் மழை அளவு 39% முதல் 44% ஆகும். இந்த நிலையில் அக்டோபர் 28 -ஆம் தேதியளவில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக மழை பெய்து வருகிறது, ஆனால் இது வடகிழக்குப் பருவமழை அல்ல" என்றார். 

- துரை.நாகராஜன்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ