Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி பிரச்னையில் தலையிட ஜனாதிபதியை நேரில் வலியுறுத்திய மக்கள் நலகூட்டியக்க தலைவர்கள்!

காவிரி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மக்கள் நலகூட்டியக்கத் தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, காவிரி பிரச்னையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

காவிரி விவகாரம் தொடர்பாக மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்களான மதிமுக பொதுச் செலயாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் எம்.பி.க்கள் டி.ராஜா, ரங்கராஜன் ஆகியோர் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுத்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "காவிரி பிரச்னைகள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரணாப் முகர்ஜியிடம் வழங்கினோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். கர்நாடகா நீர் தராததால் தமிழக விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என்று முந்திய ஆட்சியில் காங்கிரஸ் சொல்லவில்லை. மோடி அரசுதான் அமைக்க மாட்டோம் என்று சொல்கிறது. அரசியல் ரீதியாக எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை" என்றார்.

டி.ராஜா கூறுகையில், காவிரி விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரினோம். உரிய கோப்புகளை வரவழைத்து காவிரி பிரச்னையில் தலையிடுவதாக கூறினார்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close