Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகாசி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க ஜவாஹிருல்லா கோரிக்கை

சிவகாசி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையாக நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். 

சிவகாசியில் நடைபெற்றது போன்ற கோரமான விபத்துக்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மெத்தனப்போக்கால் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது. பட்டாசு விற்பனை நிலையங்களை சரியான முறையில் கண்காணிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் நிதி உதவி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close