Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரேஷன் பொருட்களை கடத்திய 913 பேருக்கு குண்டாஸ்: அமைச்சர் தகவல்

பொதுவிநியோக திட்டத்தில் கடத்தல் சம்பந்தமாக 913 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அனைத்துத்துறை திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் அமைச்சர் காமராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர், மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். நியாயவிலைக் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு  தங்குதடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவிநியோக திட்டத்தில் கடத்தல் சம்பந்தமாக 913 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

ஏ.ராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ