Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவை ஐஏஎஸ் அகாடமியில் வெடி விபத்து: ஒருவர் பலி

கோவை காந்தி பூங்கா அருகேயுள்ள ஐஏஎஸ் அகாடமியில் ஏற்பட்ட வெடி விபத்தால் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோவை காந்தி பூங்கா அருகே ஐஏஎஸ் அகாடமி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு வெடித்து சிதறியது. அங்கிருந்த சக்திவேல் என்பவர் பலியானார். மூன்று தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மாணவி ஹேமா கூறுகையில், பட்டாசு கிடங்கு அருகில் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு மின்கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்" என்றார். 

இதனிடையே, அகாடமியில் இருந்த பட்டாசு கிப்ட் பாக்ஸ் காரணமாக விபத்து நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, விபத்து நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு நடத்தி வருகிறார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close