Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் : ஆளுநர் மகிழ்ச்சி

ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இன்று ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்து‌மனைக்கு நேரில் சென்று விசாரித்து அறிந்தார். ஏற்கனவே கடந்த 1 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் உடல்நிலை குறித்து ஆளுநர் விசாரித்தார்.

அதன்பிறகு, இரண்டாவது முறையாக இன்று காலை  மருத்துவமனைக்கு சென்ற  ஆளுநர், சுமார் 25 நிமிடங்கள் மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். 

தற்போது ஆளுநர் மாளிகையில் இருந்து செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. அதில் , முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close