Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டாவது வருகையிலும் ஜெயலலிதாவை சந்திக்கவில்லையா ஆளுநர்?! தொடரும் மர்மம்

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்கனவே ஒரு முறை ஜெயலலிதா சந்திக்க அப்போலோ சென்றார். அவரை சந்திக்கவிடவில்லை.  அவர் மத்திய அரசுக்கு ரகசிய அறிக்கை அனுப்பினார். உடன் மத்திய அரசின் தூதுவர்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அப்போலோவுக்கு வந்தார்கள். அவர்கள் பல நாட்கள் அப்போலோவில் முகாமிட்டிருந்தனர். மற்ற டாக்டர்களுடன் அந்த இருவரும் இணைந்தே சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய முழு ரிப்போர்ட்டை பிரதமர் மோடி பார்வைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த நிலையில், அப்போலோ வெளியிட்ட 11வது அறிக்கையில், ஜெயலலிதா நன்றாக 'இன்ட்ராக்ட்' செய்கிறார். உடல்நிலை நன்றாக முன்னேறி வருகிறது என்கிற வார்த்தைகள் இருந்தன. இதே கோணத்தில் அ.தி.மு.கழக சீனியர் தலைவர் பொன்னையன் பேட்டி கொடுத்திருந்தார். சில மீடியாக்களிலும் உடல்நிலை தேறிவிட்டார் என்றே செய்திகள் வெளியாகின. இதையெல்லாம் கவனித்த கவர்னர், தன்னை இந்த முறை ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிப்பார்கள் என்றே எதிர்பார்த்து, இரண்டாவது முறையாக சந்திக்க முடிவு செய்தார்.

அதன்படி, இன்று காலை அப்போலோவுக்கு இரண்டாவது முறை விசிட் அடிக்க திட்டமிட்டார். தனது வருகையை முன்கூட்டியே தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தெரிவித்தார். சொன்ன நேரத்துக்கு அப்போலோவுக்கு வந்து சேர்ந்தார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கவர்னர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும் வார்டுக்கு வருகை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சுப்பையா விஸ்வநாதன் போய் சத்தியபாமா ஏன் வந்தார்?

இதற்கிடையில், சென்னையில் உள்ள அ.தி.மு.கழக ஆதரவு டாக்டர்கள் சிலர், " நேற்றைய அப்போலோ அறிக்கையில் சிகிச்சை அளிக்கும் பெரிய டாக்டர்களில் லிஸ்ட்டை முதன்முதலாக குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள் என்றால், அவரது உடல்நிலையில் பிரச்னை இன்னும் நீடிக்கிறது என்றுதானே அர்த்தம். முழுமையாக குணமாக வில்லை என்றுதான் புரிந்துகொள்ளமுடிகிறது. பொதுவாக, எந்த ஒரு மனிதனின் உடல்நிலை கன்டிஷனைப் பொறுத்தவரையில், ஏற்றம்&இறக்கம் தெரியலாம். இது மெடிக்கல் படித்த அனைவருக்கும் தெரியும். இன்று நன்றாக இருப்பார். நாளை உடல்நிலை கிரிட்டிக்கல் என்று சொல்லலாம். அப்படிப் பார்க்கும்போது, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய உண்மை நிலவரத்தை அறிவிப்பதில் அப்போலோ நிர்வாகத்தை யாரோ ரிமோட் மூலம் பேச வைக்கிறார்களோ? என்று எண்ண தோன்றுகிறது. இதற்கு முன்பு வந்த 10 அறிக்கைகளில் சுப்பையா விஸ்வநாதன் பெயரில் வெளியானது. ஆனால், நேற்று வந்த அறிக்கையில் அவர் பெயர் இல்லை. தனது பெயர் அறிக்கையில் வேண்டாம் என்று அவர் மறுத்துவிட்டதால், சத்தியபாமா டைரக்டர் ஆஃப் மெடிக்கல் சர்வீஸ் பெயரில் வெளியானதை கவனியுங்கள்" என்கிறார்கள்.


-  நமது நிருபர்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close